Al-Noor Charity Association நிறுவனத்தின் அனுசரணையுடன் வத்துபிட்டிவலை -  மாவட்ட ஆதார வைத்தியசாலையில் "கொவிட் 19" நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதிதாக அமைக்கப்பட்ட வாட்டுத்தொகுதிக்கு தேவையான 35 கட்டில் மெத்தைகள் நுளம்பு வலைகள் தலையணைகள் மற்றும் செருப்புக்களை வைப்பதற்கான ராக்கைகள் மேற்படி நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் S.M.அலியார் மற்றும் பிரதித்தலைவரும் நிதிப்பணிப்பாளருமான கலாநிதி ரிப்கி ரம்ஸான் (MPM) ஆகியோரினால் வைத்தியசாலையின் பிரதி வைத்திய அதிகாரி வைத்தியர் சிந்தக்க தினேஷ் குமாரவிடம் கடந்த செவ்வாய்க் கிழமை (2022.01.04)  வழங்கி வைக்கப்பட்டன.

கஹடோவிட்ட மேற்கு கிராம பாதுகாப்பு அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான அல்ஹாஜ் A.B.G.Firdhous (J.P), Al - Noor பிரதித்தலைவர் கலாநிதி ரிப்கி ரம்ஸானிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மேற்படி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

 இந்நிகழ்வில் அத்தனகல்ல பிரதேச உதவி செயலாளர் சமீர ஜயவர்தன மேற்படி நிறுவனத்தின் கொழும்பு மாவட்ட இணைப்பாளர் அல்ஹாஜ் M. T. M.பவ்ஸ்மின், கம்பஹா மாவட்ட இணைப்பாளரும் பிரதி தலைவரின் இணைப்பு செயலாளரும் முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான கமால் அப்துல் நாஸர் (J.P) நிறுவனத்தின் அலுவலக உத்தியோகத்தர்களான அஷ்ஷேய்க் சாஜித் இஸ்லாம் மற்றும் M.F.M.ராசித் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.