ஏப்ரல் 21, 2019 கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான "புனித செபஸ்தியார் வீட்டுத் திட்டம்" திறப்பு விழா

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி முடிவுகளுக்கு இணங்க இந்தத் தாக்குதல் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட தாக்குதல் என்பதாகவும் தமது பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றாதவர்கள் சமூக உரிமை நீக்கப்படுவதற்கு அரசியலமிப்பில் இடமிருந்தால் அந்தச் சட்டங்களுக்கு இணங்க செயற்படுவதற்கு தான் முதலாவது நபராக கை தூக்குவேன் என்று கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்கள் அதிகாரத்தைப் பாதுகாக்க எவரையும் அருகில் வைத்துக் கொள்ள எந்த அவசியமும் இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

ஒரு நாட்டையும் சமூகத்தையும் பாதுகாப்பதற்கும் ஆட்சி செய்வதற்கும் பொறுப்பற்ற எந்த நபருக்கும் பொறுப்பு வழங்க முடியாது என்றும் கடந்த ஆட்சியின் போது மக்களின் பாதுகாப்பு பற்றி மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல்.போனதால் நல்லாட்சி அரசை பதவி நீக்குவதற்கு மக்கள்.செயற்பட்டதாகக் கூறிய அமைச்சர் எமது மத நம்பிக்கைகள், மனிதாபிமான இயல்புகள் மற்றும் மன்னிப்பு கொடுக்கும் பழக்கம் கோழையாக இருப்பதற்கோ அல்லது நீதி நியாயத்தை மறைப்பதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது என்றும் தெரிவித்தார்.

ஏப்ரல் 21, ,2019 அன்று கட்டுவாப்பிட்டி, புனித செபஸ்தியார் தேவாலயத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலில்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான "புனித செபஸ்தியார் வீடமைப்புத் திட்டத்தை" திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கும்.வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு உரையாற்றினார். கொழும்பு மறைமாவட்ட உதவி ஆயர் ஜே. டீ. அந்தனி ஜயக்கொடி தேரர் தலைமையில் இவ்வீடமைப்புத் திட்டம் மக்களிடம் கையளிக்கபட்டது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீடற்ற 14 குடும்பங்களுக்கு 45.3 மில்லியன் ரூபா செலவில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த வீடமைப்புத் திட்டம் கம்பஹா, கட்டான, டேவிட்வத்த ஆகிய காணிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன்  குடிநீர், மின்சாரம், வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுடன் இது அமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்  ஆண்டகையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆலோசனையின் படி கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மேற்பார்வையின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைபடுத்தப்படுகின்றது.

மேலும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் இந்திக அனுருத்தவின் மேற்பார்வையுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் 45 மில்லியன் ரூபா பெறுமதியான வீடமைப்புதவி திட்டங்களும் நடைமுறைப்படுத்துகின்றது

நீர்கொழும்பு பிராந்திய.அனுநாயக்க சிஸ்வான் டீ. குரூஸ், செத்சரண நிறுவனப் பணிப்பாளர் லோரன்ஸ் ராமநாயக்க, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலய மறைமாவட்ட பிஷொப் மஞ்சுள நிரோஷன், கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் துமிந்த சில்வா, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்.தலைவர் ரத்னசிறி களுபஹன உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

முனீரா அபூபக்கர்

2022.01.01


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.