பிரதேசத்தில் கொவிட் தொற்று அச்சுறுத்தலின் போது பொதுமக்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றிய அத்தனகல்ல ஆயுர்வேத மத்திய நிலையம் மற்றும் அத்தனகல்ல ஆயுர்வேத சமூக, சுகாதார நிறுவனம் ஆகியவை இணைந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கான ஒருநாள் வதிவிட சிகிச்சை பிரிவை அண்மையில் (04) ஆரம்பித்தது.

அதனடிப்படையில் அத்தனகல்ல ஆயுர்வேத மத்திய நிலையத்தின் வெளி நோயாளர் பிரிவுக்கு வருகை தரும் நோயாளிகளுக்காக வைத்திய சிகிச்சை மற்றும் மருந்து கட்டுதல் உட்பட சகல சிகிச்சைகளையும் குறித்த பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.

(அத்தனகல்ல பிரதேச செயலகம்)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.