எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்த கருத்துக்கள்.

பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை முடிப்பதற்கு ஜனாதிபதி அவசர தீர்மானமொன்றை எடுத்தார்.அதற்கு அவருக்கு உரிமை உண்டு.ஆனால் இந்த தருணத்தில் அவர் ஏன் அவ்வாறு செய்தார்  என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் மிக முக்கியமான குழுக்கள், அரச நிறுவனங்களில் இடம் பெற்ற பாரிய ஊழல்களை அம்பலப்படுத்திக் கொண்டிருந்த நேரத்திலயே அவர் பதவிக் காலத்தை முடித்தார்.அவ்வாறு மேற்கொண்டமையால் அந்தக் குழுக்கள் நீக்கப்பட்டு, ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் புதிதாக அங்கத்தவர்களை நியமிக்க.அந்தக் குழுக்களின் தலைவராக முன்னைய அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை நியமித்தது.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புடைத்  தன்மையும் கொண்டிருக்க வேண்டும். இந்த அரசாங்கம் தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களையே குழுக்களின் தலைவர்களாக நியமித்தது.பேராசிரியர் சரித ஹேரத், அனுராயப்பா போன்றேரை தலைவர்களாக கொண்ட குழுக்கள் ஊழலை அம்பலப்படுத்தும் போது, ​​இதன் அங்கத்தவர் கலவையை மாற்றுவதுதான் பிரதான நம்பிக்கை.அரசாங்கம் மௌனம் காத்தது, ஆனால் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை. அவர் ஏன் சபையின் பதவிக் காலத்தை முடித்தார் என்பதை விளக்க வேண்டிய தார்மீகக் கடமை ஜனாதிபதிக்கு இருந்தது, குறைந்தபட்சம் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில்,அதற்கான பதிலைக்கூட அவர் கூறவில்லை.

பாராளுமன்றம் ஜனநாயகத்தின் முக்கிய அங்கம்.பாராளுமன்றம் மக்களின் குரல், மக்களின் காது, மக்களின் குரல். நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில் நாடாளுமன்றத்தின் கதவுகளை மூட ஜனாதிபதி தீர்மானித்தார்.அது தான் பிரச்சிணைக்குரிய விடயம்.

பேராசிரியர் சரித ஹேரத்,திரு அநுர யாப்பா மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்படுவார்களா அல்லது அங்கிருக்கும் ஆமாம் போடும் உறுப்பினர்களை வைத்து அமைப்பை மாற்றுவார்களா என்று ஜனாதிபதியின் நோக்கம் என்னென்று பொறுமையாக காத்திருக்கிறோம். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியது மக்களின் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துவதுதான், பின்னோக்கி அல்ல. அரசாங்கத்தின் இரு வருட முடிவில். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு சாதகமானதா பாதகமானதா என்ற முடிவை எடுக்க வேண்டியுள்ளது.இது மக்களின் சார் உள்ள பொறுப்பு. அதற்காக மக்கள் மேற்கொண்டு செல்ல தேவையில்லை. ஜனாதிபதியின் அன்மைய உரை தொடர்பாக மக்களின் அபிப்பிராயங்கள் அவரது முகநூலில் வெளியாகியுள்ளது.அந்தப முக நூல் பக்கத்திற்கு சென்று மக்கள் கருத்து என்னவென்று பாருங்கள்.மக்களின் குரலே அது. பொதுமக்களின் பதிலைப் பார்க்க சில நிமிடங்கள் ஒதுக்குமாறு உங்களை அழைக்கிறேன்.

மக்கள் இன்று விசித்திரக் கதைகளை நம்பி ஏமாறுவதில்லை.புத்திசாலித்தனமான பதில்களைப் எதிர்பார்த்துள்ளனர். மிகவும் வெட்கம்.மக்களின் இத்தகைய பதில்கள். இனி ரோஜாக்களின் படங்களை காட்ட வேண்டாம் என்று அரசை கேட்டுக்கொள்கிறோம். ஜனாதிபதியின் உரையில் இந்த நாட்டு மக்களின் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை. அவர் ஒரு விசித்திர உலகில் உள்ள ஜனாதிபதி போல் பேசினார். நிவாரணப் பொதி பற்றி பேசினார்கள்.அதற்கு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு இல்லை. பண அங்கீகாரம் இல்லை.இந்த பணத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பது கேள்விக்குறி.

மக்களை மேலும் ஏமாற்றும் முயற்சி இது.

அத்தியாவசிய உணவு கப்பலில் வருகிறது, ஆனால் தரையிறங்க வழி இல்லை, பணம் இல்லை. எண்ணெய் வருகிறது.கப்பலை இறக்க வழி இல்லை.பணமும் இல்லை. மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது ஆனால் அவற்றை வாங்க பணம் இல்லை என்று ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் ஒரு கப்பலுக்குச் செலுத்த 6 மில்லியனுக்கும் அதிகமாக தொகையை செலவிடுகிறது. எமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. உரம் கிடைக்கவில்லை காசு தான் கொடுத்தோம். அந்த தவறான அநியாய ஒப்பந்தத்தை செய்தது யார்? இவற்றுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தாலும்,குடிமக்களால் இவற்றை பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது. மக்களின் பணத்தில் விளையாடி,கஜமித்துரு நட்பு முதலாளித்துவத்தின் முடிவை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது.

500 மில்லியன் டொலர் நிதியை கடன் பத்திரங்களாக செலுத்தியுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. நாட்டின் உயர்மட்ட பொருளாதார வல்லுநர்கள் 100% மறுசீரமைப்புக்கு செல்லுங்கள் இன்றேல் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாது போகும் என்று கூறியுள்ளனர். இந்த விடயத்தில் சட்டத்தரணிகள் சங்கத்தின், “நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கவும்” என்ற ஆலோசனையையும் அரசாங்கம் கேட்கவில்லை. அனைத்தையும் கைக்கூலிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கொள்கையில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் முன்னுரிமை இந்நாட்டு மக்களுக்கே அன்றி அவர்களின் கூட்டாளிகளுக்கே முன்னுரிமையாக செயற்படுகிறது. விவசாயம் வீழ்ச்சி கண்டுள்ளது.நெல் உற்பத்தி வீழ்ச்சி, மரக்கறி உற்பத்தி வீழ்ச்சி, தேயிலை உற்பத்தி ஏற்றுமதி வருமானம் இழப்பு, எரிவாயு தட்டுப்பாடு,அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, வாழ்க்கைச் செலவு கட்டுப்படியாகாதது போன்றன அறிகுறிகள் நாட்டிலிருந்து உலகிற்கு தெரியவருகின்றன. 

வறுமைக்கும் வருமானத்துக்குமான  இடைவெளியை அதிகப்படுத்தியுள்ளது. நமது பிராந்தியத்தையும் மற்ற நாடுகளையும் பாருங்கள்.அந்த நாடுகள் பெரிய அளவில் முதலீடுகளை அதிகரித்துள்ளன.

ஆப்கானிஸ்தானை தவிர அனைத்து நாடுகளும் சிங்கப்பூர், மலேசியா செல்ல தேவையில்லை.மாலைதீவைப் பாருங்கள். வங்கதேசம் மாலத்தீவுகள் மற்றும் வியட்நாமைப் பாருங்கள். நேரடி முதலீட்டை அதிகரித்துள்ளன.அன்னிய கையிருப்பை அதிகரித்துள்ளன.

அது மட்டுமன்றி, கொவிட்டினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைப் பாருங்கள்.சதவீதமாக இந்த பிராந்தியத்தில் அதிகளவான உயிர்கள் பலியாகியுள்ளது ஆப்கானிஸ்தான்.அடுத்தபடியாக இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இலங்கை உருவாக்கிய தவறான கொள்கைகள் மற்றும் தவறான முடிவுகளால் தான் இது நடந்துள்ளது. அப்போது தடுப்பூசி பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, ​​நாடாளுமன்றத்தில் அரசாங்க அமைச்சர்கள் கேலி செய்தனர்.முகக்கவசம் பற்றி பேசிய போது சிரித்தனர். ஜனாதிபதி முதலில் பேசும் போது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த  பின்னர் இது எனக்கு பெரிய பிரச்சினையல்ல என்றார். இந்த மனப்பான்மை தான் இருந்தது.முட்டி பானிக்குப் பின்னால் சென்று பல உயிர்களை பலிவாங்கியது. இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.  அரசாங்கத்தை நோக்கி விரல் நீட்டுகிறேன்.

ஜனாதிபதியின் உரையில், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களின் குரல்களுக்கு செவிசாய்ப்பது குறித்து பேசினார். அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்தால், பேச்சாளரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுப்பதுதான் நடக்கிறது. சமூகவலைத்தள ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, அரசியல் ஆர்வலர்களுக்கும் இதே நிலைதான். முன்னிலை சோசலிச கட்சியைச் சேர்ந்த சமீர கொஸ்வத்த போன்றவர்கள் கைது செய்யப்பட்டு கோவிட் தொற்றுக்கு ஆளாகி தற்போதைய நிலைக்கு கொண்டு வரப்பட்டனர்,தொழிற்சங்க தலைவர்கள் கொண்டுவரப்பட்டனர்,அசாத் சாலி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் தண்டிக்கப்பட்டனர். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பாக சர்வதேச சமூகத்தில் இருந்து எமது நாட்டை நோக்கி விரல் நீட்டுபவர்களுக்கு அரசாங்கம் செவிசாய்ப்பதில்லை.

இன்று கத்தோலிக்க மக்களிடையே பயங்கரவாதம் குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சி நடக்கிறது. காதினலின் அறிக்கையில் நான் நம்பிக்கை இழந்துவிட்டோம் என்ற அவநம்பிக்கை எழுத்துள்ளது. எனவே ஜனாதிபதி விசித்திரக் கதைகள் பேசி ரோஜாக்களின் படங்களை உருவாக்குவதில் அர்த்தமில்லை.உண்மை நிலை மக்களுக்கு தெரியும்.ஒவ்வொரு நாளும் மக்களை ஏமாற்ற முடியாது.யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும். மக்கள் சார்ந்த உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். இவர்களின் நோக்கம் மக்கள் அல்ல, கோவிட் தொற்றுநோய் மூலம் இலங்கைக்கு வந்தவர்களைக் கூட சுற்றுலா ஹோட்டல்களில் வைத்து தங்கள் கூட்டாளிகளுக்கும் முதலாளித்துவத்திற்கும் நிறைய பணம் கொடுப்பதற்காகவே தெரிவு செய்து பயன்படுத்தினர்.மக்களுக்காக செயல்படவில்லை. 

நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் வேளையில், ஜனநாயகத்துக்கு சவால் விடும் வகையில் உள்ள நிலையில், நாடாளுமன்றத்தை முடக்கும் பாதையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஒரு நல்ல நாட்டில் ஜனநாயக இருப்பின் எதிர்காலத்திற்கு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இன்று நிறுவனங்களின் தலைவர்கள், செயலாளர்கள் நீக்கப்படுகிறார்கள். பாராளுமன்றத்தில் பட்டதாரிகளாகிய அறிவும் அனுபவமும் உள்ளவர்கள் பின்னால் செல்வதில்லை. அரசின் தவறுகளை விமர்சிக்கிறார்கள்.அத்தகையவர்களுக்கு வெளியே செல்ல வேண்டும் என்ற சிக்னல் கொடுக்கப்படுகிறது. இன்றைய சிறந்த குறிகாட்டி வாக்கெடுப்பு.ஜனாதிபதியின் முகநூல் பக்கத்திற்குச் செல்லவும்.மக்களின் எதிர்வினை என்னவென்று சில நிமிடங்கள் ஒதுக்கி பாருங்கள்.மக்கள் முட்டாள்கள் அல்ல.அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர முழுநேரம் உழைத்த அர்ப்பணிப்புள்ள மக்களுக்கு இன்று நடந்ததுள்ளது? வெற்று வார்த்தைகளை பயன்படுத்துவதில் அர்த்தமில்லை.பிரயோக ரீதியாக செயற்ப்பாட்டில் இருக்க வேண்டும். தொலைநோக்கு பார்வை இல்லாமல் அலையும் அரசாங்கம்.இது நான்கு திசைகளுக்கும் இழுக்கப்படுகிறது.கேபினட் அமைச்சர்கள் வழக்குகள் போடுகிறார்கள்.அமைச்சரவை முடிவு என்னவென்று அமைச்சர்களுக்கே தெரியவில்லை.நாங்கள் ஏமாற வேண்டியதில்லை. எமது பயணத்தில் இணைந்து கொள்ளுங்கள் என ஜனாதிபதி கூறுகிறார்.அத்தகைய பயணத்தில் நாம் எவ்வாறு இணைய முடியும்? அங்கே நாமும் பாவிகளாகி விட முடியாது.மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.இது கஜமித்துரு நட்பு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவ கொள்கைகள், பழங்குடி குடும்ப ஆட்சி கொண்ட அரசாங்கம் இதில் எம்மால் இணைய முடியாது.ஆட்சியுடன் இனைவது அது மகா பாவம்.அனைத்து யோசனைகளையும் ஒருங்கிணைத்து அவற்றைக் கேட்டு சரியான பாதைக்கு வர தயாராக இருக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இருந்தால் எம்மால் கருத்திற் கொள்ளலாம்.இந்தப் பாவப் பயணத்தில் நாம் இணைய முடியாது. நாங்கள் அதிகாரத்தைப் பெற விரும்பவில்லை, ஆனால் இந்தப் பயணத்திற்கு முடிவு காண வேண்டும் என்றே விரும்புகிறோம். மக்களால் இனி பொறுக்க முடியாது.மக்கள் பக்கம் சிந்தியுங்கள்.மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?இன்று எத்தனை கோடி பணம் அச்சடிக்கப்படுகிறது? மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை.பல விடயங்கள் வெளிவராத இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் சார்ந்த உணர்வுடன் இருக்க வேண்டும் என்றே நான் எப்போதும் சொல்வதாகும். ஜனாதிபதி பிரேமதாச ஆட்சிக்கு வந்ததும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.நாட்டில் இரு தரப்பிலும் எரியும் தீபந்தத்தையே கையில் எடுத்ததார்.இல்லை இயலாது என்று கூறவில்லை.மதிய உணவு கொடுத்தார்,சீருடை கொடுத்தார், பாடப்புத்தகம் கொடுத்தார்,கிராமங்களை நிர்மானித்தார்,வீடு கட்டினார்,அன்னிய நேரடி முதலீட்டைக் கொண்டு வந்தார்,200 ஆடைத் தொழிற்சாலைகளை தொலைதூரப் பகுதிகளுக்குக் கொண்டு வந்தார், குழந்தைகளை பெருமையுடன் வேலைக்கு அழைத்து வரும் நிலை உருவாகி, வேலைக்கு அமர்த்திய பெருமையை ஏற்ப்படுத்திக் கொடுத்தார்.இயலாமையிலுள்ள மனிதர்களை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது.இன்று நடந்ததுள்ளது துரதிஷ்டம். ஏழ்மையும் ஊட்டச்சத்து குறைபாடும் அதிகரித்துள்ளன.பணக்காரனுக்கு நேரடி வரிக்குப் பதிலாக மறைமுகமாகவும் வரிச்சலுகை வழங்கப்படுகிறது.கடன் நெருக்கடிக்கு திரு.மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்க வேண்டும்.அவர்கள் வாங்கிய வணிகக் கடன்களே அதிகம். 

எமது கட்சி புதிய கட்சியாகும்.இந்த இயக்கம் கட்சி தனது மரபுவழியில் இருந்து தீவிர வலதுசாரிகளுக்கு செல்வதற்கு எதிராக கொள்கைப் போராட்டத்தை நடத்தி உருவாக்கப்பட்டது. கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறையை வருடாந்தம் கொண்டு வந்தது.இந்த இயக்கம் ஒரு புதிய பயணத்திற்காக கொண்டு வரப்பட்டது எனவே பழையதைக் கொண்டு அளவிட இதை அளவிட வேண்டாம்.கடந்த காலத்தை வைத்து  கட்சியை எடை போடாதீர்கள். 60 களில் கத்தோலிக்க படையெடுப்பு பிரச்சினைகளை உருவாக்கியது யார் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழர் பிரச்சனைகளை உருவாக்கியது யார்? முஸ்லிம் பிரச்சனைகளை உருவாக்கியது யார்? யாருக்காக இன்று மீண்டும் கத்தோலிக்க பிரச்சினைகளை உருவாக்க முயல்வது யார்? அவர்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதில்லை,அழகான கோஷங்களும் வார்த்தைகளும் கொண்டவர்கள்.நவாற்றல் என்பது மட்டும் முக்கியமான பயன் அல்ல.

ஐக்கிய மக்கள் சக்தி முன்னெப்போதும் இல்லாத எதிர்க்கட்சிகள் போன்று  நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டத்தை நடத்தி வருகின்றன.செயற்ப்பாட்டில் யதார்த்தமாகவுள்ளன.நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன.எமக்கு பிரதான ஊடகங்களிலும் அரச ஊடகங்களிலும் இடம் இல்லை. விளம்பரம் இல்லை.ஆனாலும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் போராட்டம் குறித்து மக்களுக்கு நன்கு தெரியும் என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.