கஹட்டோவிட்ட YMMA கிளையினால் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கான அப்பியாச  கொப்பிகள் மற்றும் சப்பாத்துக்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும், தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய  மாணவர்களை பாராட்டும் நிகழ்வும் நேற்றைய தினம் (25) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

முதலாவது கட்ட நிகழ்வுகளுக்கான செய்திக்கு : http://www.siyanenews.com/2022/01/projector.html?m=1

குறித்த நிகழ்வில் தரம் 05 புலமைப்பரிசிலில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு ஒரு பெற்றோர் அனுசரணையில் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கஹட்டோவிட்ட YMMA கிளை சார்பில் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் KahatowitaNews Page Official சார்பிலும் ஒரு தொகை அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கு முன்னர் பாடசாலையின் ஸ்மார்ட் வகுப்பறையில் டெப் கணினிகளுக்கு  தேவையான கேபிள்களை கொள்வனவு செய்வதற்கான காசோலை கஹட்டோவிட்ட YMMA கிளையின் தலைவர் அல்ஹாஜ் பிர்தவ்ஸ் மூலம் பாடசாலை அதிபர் அஸாமிடம் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் ஏற்கனவே கஹட்டோவிட்ட பத்ரியா ம.வி. மற்றும் கஹட்டோவிட்ட முஸ்லிம் முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் என்பவற்றுக்கு தலா நான்கு பாதணிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், ஸ்மார்ட் வகுப்பறைக்கான நுழைவாயிலும் கஹட்டோவிட்ட YMMA தலைவர் அல்ஹாஜ் பிர்தவ்ஸினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

நிகழ்வில் ஓய்வு பெற்ற புத்தளம் வலயக்கல்வி பிரதி பணிப்பாளர் (தமிழ்) ஜலீல், கம்பஹா வலயக்கல்வி பிரதி பணிப்பாளர் (தமிழ்) தவ்ஸீர், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட YMMA பணிப்பாளர் நஸாரி காமில், மத்திய கொழும்பு YMMA செயலாளர் அலீம், கஹட்டோவிட்ட YMMA கிளை தலைவர் அல்ஹாஜ் பிர்தவ்ஸ் மற்றும் பாடசாலை அதிபர் அஸாம் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இது தவிர, நிகழ்வுகளை தொடர்ந்து கஹட்டோவிட்ட YMMA கிளை சார்பில் கஹட்டோவிட்ட முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறிய மாணவிகளுக்கு வழங்கி வைப்பதற்காக அப்பியாசக்கொப்பிகள் பாடசாலை அதிபர் சர்ஜூன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் சுலைமான் ஆகியோரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இவற்றை அல்ஹாஜ் பிர்தவ்ஸ், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட YMMA பணிப்பாளர் நஸாரி காமில், மத்திய கொழும்பு YMMA செயலாளர் அலீம் ஆகியோர் வழங்கி வைத்தனர். (Siyane News)

















கருத்துரையிடுக

Blogger இயக்குவது.