"கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை - கொழும்பு கோட்டைக்கு இடையில் நடைபெற்ற நகரங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்பட்ட "புலதுசி " அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவையானது போக்குவரத்து அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி அவர்களின் தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் 28.01.2022 திகதி முதல் மட்டக்களப்பு - கொழும்பு சேவையாக விஸ்தரிக்கப்படவுள்ளது. பொலன்னறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் என்னால் 20.04.2021 அன்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது" என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
"குறித்த ரயில் சேவையானது பொலன்னறுவையிலிருந்து அதிகாலை 3 மணிக்கு மணிக்கு புறப்பட்டு காலை 9 மணிக்கு கொழும்பினை வந்தடைகின்றது. அதேபோன்று கொழும்பிலிருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 7.15 மணிக்கு பொலநறுவையினை சென்றடைகின்றது.
இந்தநிலையில் அதிகாலை 3 மணிக்கு பொலன்னறுவையில் இருந்து குறித்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்னராக மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்க முடியுமா என்பதனை ஆராயந்து பாருங்கள்.
அதிகமான நேரங்களில் காலியான இருக்கைகளுடன்னேயே ரயில் கொழும்பினை சென்றடைகின்றது. பொலன்னறுவை யில் இருந்து சேவையினை ஆரம்பிக்கின்றமை காரணமாகவே குறைந்தளவானர்கள் பயணிக்கின்றனர்.
எனவே பொலன்னறுவை க்கான ஆசனங்களை ஒதுக்கீடு செய்ததன் பின்னராக, பொலன்னறுவையில் இருந்து குறித்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்னராக மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்க முடியுமா? என கேள்வி எழுப்பியிருந்தேன்.
ஏனெனில் தற்போது மட்க்களப்பிலிருந்து கொழும்பிற்கு வரும் ரயிலில் பயணிப்போர் இரண்டு நாட்களாவது கொழும்பில் தங்கியிருந்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. எனினும் காலை 9 மணிக்கு கொழும்பிற்கு வருகை தந்தால், தங்களது கடமைகளை பூர்த்தி செய்துகொண்டதன் பின்னர் மீண்டும் அன்றைய தினம் மாலையே மட்டக்களப்பிற்கு திரும்பி செல்ல முடியும்.
நான் பொலன்னறுவை – கொழும்பிற்கான ரயில் சேவைக்கான நேரத்தினை மாற்றுமாறு கூறவில்லை அந்த நேரத்திற்கு முன்னராக மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்க முடியுமா எனவும் நடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தேன்
இதற்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர், அதிகாரிகளுடன் பேசிவிட்டு உரிய பதிலினை வழங்குவதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து வெள்ளோட்ட முறையில் இதனை செய்து பார்க்க முடியுமா?“ எனவும் கேள்வி எழுப்பியிருந்தேன்."
அதனடிப்படையில் இந்த சேவையினை மீளவும் ஆரம்பித்தமைக்கு போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாரற்சி அவர்களுக்கு மட்டக்களப்பு மக்கள் சார்பாக எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
20.04.2021 பாராளுமன்ற உரை https://fb.watch/aLC8Y4k2Ee/

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.