வீரம், தேசபக்தி என்று தம்பட்டம் அடிக்கும் அரசாங்கம் இந்த நாட்டின் பெருமைக்குரிய மக்களின் சுயமரியாதைக்கு துரோகம் இழைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி இதுவரையில் 1.4 இலட்சம் கோடி ரூபாவை அச்சிட்டுள்ளதாகவும், வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் தன்னிச்சையாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்திற்கான காரணமும் அதுவே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதிகளவில் பணம் அச்சிடப்படுவதால் ஏற்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் மிகவும் கடுமையாக இருக்கும் என தானும் எதிர்க்கட்சியினரும் ஆரம்பம் முதலே அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த போதும் அரசாங்கம் அதை தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தெனியாய தேர்தல் தொகுதி தலைமை அலுவலகம் இன்று (23) மொரவகவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அதன் நிமித்தம்  பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு அதற்கு பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு கிலோ அரிசியின் விலை மிக விரைவாக கிட்டிய எதிர்காலத்தில் 200 மற்றும் 300 ரூபாவை தாண்டலாம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்களது வாழ்க்கை தொடர்பாக சிந்திப்பதற்கான ஒரு சிறு சந்தர்ப்பத்தை எனும் அரசாங்கம் விட்டுவைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மக்களை அனாதைகளாக்கிய யுகம் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமெனவும், எந்தவொரு தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.