இன்று நாட்டில் மஞ்சள் தட்டுப்பாடு இல்லை, மஞ்சள் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளதாக கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர்களுக்கு அவர்களுக்கான பதவிகளைப்; பகிர்ந்தளித்த போதும் அதனைப் பற்றி மோசமான முறையில் விமர்சனம் செய்த மக்களும் பல ஊடகங்களும், கடந்த காலங்களில் அமைச்சர்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து எந்தவித சேவைகளும் செய்யவில்லை, எவ்வாறாயினும் இன்று அனைத்து அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் கிராமம் கிராமமாகச்; சென்று மக்களுக்குத் தேவையான பல சேவைகளை செய்து வருவதோடு இன்று பல அரச நிறுவனங்கள் அமைச்சர்களின் பங்களிப்பினால் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற நிறுவனங்களாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் போது தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்ததால் சுற்றுலாத்துறையும் வீழ்ச்சியடைந்து உல்லாசப் பயணிகளின் வருகை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட போது தற்போதைய ஜனாதிபதி படிப்படியாக அந்த உல்லாசப் பயணிகளின் வருகையை மேம்படுத்தி அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர் இறக்குமதியைக் குறைத்து விட்டு ஏற்றுமதித் துறையில் அதிக இலாபம் பெறுவதற்காக வேண்டி புதிய பொருளாதார திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பிரதிபலன்கள் இப்போதல்ல எதிர்காலத்தில் கிடைக்கும் என்றும் அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றினார்.

கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டி தேர்தல் தொகுதியில் வெற்றிலை ஏற்றுமதி கிராமங்கள், மலர் ஏற்றுமதி கிராமங்கள் இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. 100%  சேதனப் பசளைகளைப் பயன்படுத்தி பயிரிடப்பட்ட நெல் அறுவடை தற்போது கிலோ ஒன்று 70-80 ரூபா விலையில் விற்பனை செய்யப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபீட்சத்தின் நோக்கு” விஞ்ஞாபனத்தின் கொள்கையை வெற்றி காணும் நோக்கில் விவசாயிகளுக்கு அதி கூடிய விலை செலுத்தல் - பாவனையாளர்களுக்கு சலுகை விலை  வழங்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் மஞ்சள் அறுவடை விழாவின் போது கலந்து கொண்டு அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார். கரும்பு, சோளம், மரமுந்திரிகை, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அது சார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவின்; தலைமையின் கீழ் திவுலப்பிட்டி, கித்துல்வல, பிடதெனிய வித்தியாலங்கார பிரிவெனா விகாரையில் நடைபெற்றது.   

கரும்பு, சோளம், மரமுந்திரிகை, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அது சார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் இத் திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தியுள்ளதோடு இலங்கை மசாலா சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து மஞ்சளை கொள்வனவு செய்கிறது.

இதனடிப்படையில் இன்றைய நிகழ்வின் போது கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டி தேர்தல் தொகுதியில் 20000 கிலோ மஞ்சள்; கிலோ ஒன்று ரூபா 165 படி அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டது. விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மஞ்சளுக்கு அன்றைய தினமே பணமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திவுலப்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் தரங்க ஜயசிங்க, ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.பீ.பீ. திஸ்னா, இலங்கை மசாலா சந்தைப்படுத்தல் சபை தலைவி குமுதினி குணசேகர, ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் (அபிவிருத்தி) உபுல் ரணவீர> திவுலப்பிட்டி பிரதேச செயலாளர் டபிள்யு.டபிள்யு.எம்.பீ. குமாரி அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


முனீரா அபூபக்கர்

2022.01.25







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.