ஐந்தாவது தேசிய இளைஞர் பாராளுமன்றத்தின்  இரண்டாவது அமர்வு  2022 ஜனவரி 18 மற்றும் 19 தினங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக மாலைதீவு நாட்டின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகர் மொஹமட் நசீத் அவர்கள் கலந்து கொண்டதுடன், இலங்கை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான திரு நாமல் ராஜபக்ஷ அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.மேலும் ஏனைய அமைச்சர்களும் வருகை தந்திருந்தனர்.

"கொவிட் 19 தொற்று நோய் பரவலை அடுத்து நாட்டின் தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் வகிபாகம்" எனும் தலைப்பை அடிப்படையாகக் கொண்டே இந்த அமர்வு இடம் பெற்றது.

இந்த அமர்வில் பேருவளை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், வெளிவிவகாரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக் கருத்துக் கூறுகையில்,

கொவிட் 19 தொற்று காலத்தில் தமது நாட்டு நிலைமையை வெற்றிகொண்ட நாடுகளான (நியுசிலாந்து,வியட்நாம் மற்றும் தாய்லாந்து) போன்ற நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, இலங்கையிலும் அந்த ஆலோசனகளுக்கு அமைய புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட வேண்டும் மேலும் இதனை தேசிய பாராளுமன்றம் கருத்திற் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

மேலும் இவ்வருடம் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதேச வாரியாக செயற்திட்டங்களை நிறைவேற்ற அரசினால் வழங்குவதாக கூரப்பட்ட நிதியங்களோ, கொடுப்பனவுகளோ இதுவரை வழங்கப்படவில்லை எனவே அது தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டது.

அவ்வாறு இருந்தும் தமது பிரதேசத்தில் தன்னார்வமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் ஒன்று தான் இந்த "நான்கு பிரதான திட்டங்கள் நடைமுறைப்படுத்தல்" எனும் செயற்திட்டம் என்றும் குறிப்பிட்டார். 

இறுதியாக, இந்நாட்டின் முதுகெலும்பு இளைஞர்கள் என்ற விடயத்தையும், அவர்களுக்கான களத்தை அமைத்து தர வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமை என்றும் கூறினார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.