இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் மறுசீரமைக்கப்பட்டவிருக்கின்றன.

இதற்கமைய, தனியார் மற்றும் போக்குவரத்துச் சபை பஸ்களுக்கான திருத்தப்பட்ட கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்த பட்ச கட்டணம் 14 ரூபாவிலிருந்து 17 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளின் விலை அதிகரித்துள்ளமை, பஸ் உதிரிப்பாகங்களின் விலையேற்றம் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பஸ் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ,வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் மற்றும் சமூகப் பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.