கண்டி மாவட்ட மற்றும்  மத்திய மாகாண,கிழக்கு மாகாண சவாட் குத்துச்சண்டை சம்மேளனத்தின்  ஏற்ப்பாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் சவாட் குத்துச்சண்டை 2நாள் தரப்படுத்தல் செயலமர்வு கம்பளை திமு ஜெயரட்ண மண்டபத்தில் இடம்பெற்றது.

மத்திய மாகாண சவாட் குத்துச்சண்டை   சம்மேளனம் மற்றும் Sir Lanka chinese kung-fu and savate kick boxing academy தலைவருமான T.M.நவ்ஷாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதோடு இதில் செயற்பாட்டு ரீதியான குத்துச்சண்டை போட்டிகளும் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில்  கிழக்கு மாகாண சவாட் சம்மேளனத்தின்  செயலாளர் N.ஸதாம்  மற்றும் ஒட்டமாவடியில் இயங்கி வரும் Shotokan karate & Martial arts school மாணவர்கள் மட்டக்களப்பு, அம்பாறை (நிந்தவூர்) மாவட்டங்களை மையப்படுத்தி பங்குபற்றி சான்றிதழ்களை பெற்றிருந்தனர்.

இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதியாக கண்டி மாவட்ட சவாட் குத்துச்சண்டை சம்மேளன ஆலோசகரான தேசகீர்த்தி பஸ்லான் பாரூக் மற்றும் தேசிய சவாட் குத்துச்சண்டை  சம்மேளன  தலைவர் பிரசாத் விக்ரமஸிங்கவும்  கௌரவ அதிகளாக தேசிய சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பாரிஸ் மௌலானா,ஷாக்கீர் ஹுஸைன் மாஸ்டர் ஆகியோல் கலந்து கொண்டிருந்தனர்.

இம்மாதம் பாகிஸ்தான் லாகூரில் இடம்பெறவுள்ள சவாட் குத்துச்சண்டை  போட்டியில் கலந்து கொள்வதற்கான 12 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.