நாட்டில் கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது என்று கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

வைத்தியசாலைகளில் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, கொரோனா பரிசோதனைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையும் அதிகரித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இந்நிலைமையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும், சுகாதாரச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சுமார் 40 சிறுவர்கள் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும்  இது ஒப்பீட்டளவில் அதிகரிப்பு எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். 

Tamilmirror

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.