கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிடுவதற்காக கடந்த 10 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் சுமார் 90,000 பேர் வருகைத் தந்துள்ளனர்.
கொழும்பு துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை கடந்த 10 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
10 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வைரயில் 89,540 பேர் இந்த நடைபாதையை பயன்படுத்தியுள்ளனர். கடந்த 16 ஆம் திகதி பெரும் எண்ணிக்கையிலானோர் இதனை பயன்படுத்தியுள்ளனர். அன்றைய தினம் வருகைத்தந்தோரின் எண்ணிக்கை 22,580 ஆகும்.
விடுமுறை தினமான வெள்ளி மற்றும் திங்கள் வரையான காலப்பகுதியில் முறையே 19,717 மற்றும் 21, 656 பேர் இங்கு வருகைத்தந்துள்ளனர்.
நாளாந்தம் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை இது பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.
தற்பொழுது இங்கு வாகன தரிப்பிடத்துக்கான அனுமதி இல்லை. புதிய நடைப்பாதையை பயன்படுத்தும் பொழுது கொவிட் - 19 தொற்று தொடர்பான வழிகாட்டிகளை சரியான முறையில் கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம்