தமிழ் சினிமா பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதிய பாடல்களின் வெளியீட்டு விழா நேற்று (21.01.2022)கொழும்பு சிட்டிசென்டர் ஸ்கோப் சினிமா திரையரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

தமிழ் சிங்கள, முஸ்லிம் கலைஞர்கள்,கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட சிறப்பான நிகழ்வாக இசை சங்கமம் அமைந்திருந்தது.

பாடலை தெரண தொலைக்காட்சியின் தலைவர் டிலிப் ஜெயவீர உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைத்தார். இப்பாடலில் இலங்கையின் நான்கு திசைகளிலும் உள்ள கலைஞர்கள் பங்களித்துள்ளனர்.

இலங்கை கலைஞர்கள் எந்த வகையிலும் எந்த நாட்டின் கலைஞர்களுக்கும் குறைந்தவர்கள் அல்ல என்பதை #பொத்துவில்_அஸ்மின்  அவர்களினதும் அவர் பாடலுக்கு இசையமைத்த பாடி, நடித்த கலைஞர்கள் நிரூபித்து விட்டனர்.

பொத்துவில் அஸ்மின் இந்திய திரைப்படங்களுக்கு பாடல் எழுதி ஏற்கனவே இலங்கை தமிழ் கலை உலகை நிமிர்ந்து பார்க்க வைத்தவர்.அந்த வகையில் இன்று அவரின் இந்த பாடல்களும் அவர் பாடல் பயணத்தில் மைல்கள் என்பதே உண்மை. 

இந்தப் பாடல்களை தமிழ் பாடகர்கள் பாடியதுடன் ஒரு ரவி ரோய்ஸ்ட்டர் என்ற பிரபல சிங்கள மொழி பாடகரும் பாடி இருப்பது அதுவும் மிக சிக்கலான உச்சரிப்பைக் கொண்ட வார்த்தைகளை பிசகாமல் பாடியது ஆச்சர்யமாகவே இருந்தது.

இதுவரை தமிழ் பாடலை பாடிய சகோதரமொழி பாடகர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் தமிழ் உச்சரிப்பு எப்படி இருந்தது என்பதுடன் இதை ஒப்பிட்டுல் பார்த்தால் 100 க்கு 110 மதிப்பெண் கொடுக்கலாம்.

சிங்கள பாடல் வரிகளை உள்வாங்கி , ஏற்கனவே காட்சிப் படுத்தப்பட்ட வீடியோவின் காட்சிகள் , வாயசைவுகள் , இசை என அனைத்தையும் முழுமையாக உள்வாங்கி    அதற்கேற்ப பாடல் வரிகளை அமைத்த நம் நாட்டு பாடலாசிரியர் அஸ்மின் அவர்களின் அபார படைப்பான இதை நாம் வாழ்த்தி நகராமல்  கீழே உள்ள இணைப்பில் சென்று பார்த்து பகிரவும்.அதுவே நமது நாட்டின் கலை உலகின் வெற்றி வழிசமைக்கும்.

http://www.etunes.lk/newrelease/

#DeranaDreamStar  #srilankamusic  #tamilcinema  #tamilcinemaupdates 
#பாடலாசிரியர் #பொத்துவில்_அஸ்மின்

Thanks : Zimara Ali 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.