இலங்கைக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கான அமெரிக்க டொலர் கடனாக வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நாளாந்தம் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாட்டில் போதுமான அமெரிக்க டொலர்கள் இருப்பதாகவும், அரசாங்கத்துக்கு நெருக்கடியான பிரச்சினை எதுவும் இல்லை எனவும் பொதுமக்களிடம் கூறினால், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு தூண்டப்படமாட்டார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த பிரச்சினையை சமாளிக்க அனைத்து குடிமக்களும் தியாகங்களை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Tamilmirror

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.