கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் ஸ்மார்ட் வகுப்பறைக்கான தளபாடங்கள் வழங்கி வைத்தல், மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டுதல் மற்றும் "ரடக் வடினா பொதக்" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இன்று (25) பாடசாலை வளாகத்தில் அதிபர் அஸாம் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினரும், கஹட்டோவிட்ட YMMA கிளை தலைவருமான அல்ஹாஜ் பிர்தவ்ஸ் JPயின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுகளில் பிரதான நிகழ்வாக முன்னாள் புத்தளம் கல்வி வலய பிரதி பணிப்பாளர் (தமிழ்) மொஹமட் ஜலீலின் அனுசரணையில் பாடசாலையின் ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான மல்டி மீடியா ப்ரொஜெக்டர் மற்றும் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகமுமான எம்.எம்.மொஹமட், ஓய்வு பெற்ற புத்தளம் வலயக்கல்வி பிரதி பணிப்பாளர் (தமிழ்) ஜலீல், கம்பஹா வலயக்கல்வி பிரதி பணிப்பாளர் (தமிழ்) தவ்ஸீர்,  அத்தனகல்ல பிரதேச சபை தவிசாளர் ப்ரியந்த புஷ்பகுமார மற்றும் பிரதேச சபை உறுப்பினர் புளத்சிங்கள, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட YMMA பணிப்பாளர் நஸாரி காமில், மத்திய கொழும்பு YMMA செயலாளர் அலீம் மற்றும் பாடசாலை அதிபர் அஸாம் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இரண்டாவது கட்டம் : கஹட்டோவிட்ட பத்ரியாவில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களை பாராட்டும் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுகள் http://www.siyanenews.com/2022/01/blog-post_26.html

 (Siyane News)
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.