பேராசிரியர் அல்லாமா உவைஸ் அவர்களுடைய நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்ற இக்காலகட்டத்தில், அவர் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் ஆரம்ப கால அங்கத்தவர், ஆரம்ப கால அதிகாரி என்பது எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை.

அவர்தான் 1950களில் இருந்து ஸாஹிரா கல்லூரி விரிவுரையாளராக இருந்த காலத்தில் மர்ஹூம் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களின் அழைப்பின் பேரில் அழைத்து வந்து வானொலிக்கு நிகழ்ச்சி வழங்குமாறு கேட்டார்கள்.

அந்த வகையிலே அப்போது ஒருகாலத்தில் நேரடியாக நிகழ்ச்சிகள் வழங்கி இதனை தயாரித்து வழங்கியவர்தான் பேராசிரியர் அல்லாமா உவைஸ் அவர்கள்.

5, 10 நிமிடங்கள் கூட நிகழ்ச்சிகள், செய்திகள் என்பவற்றையெல்லாம் தயாரித்து அவர்கள் அக்காலத்தில் இருந்து வழங்கி வந்திருக்கிறார்கள்.

அவர்களது ஞாபகர்த்தமாக முத்திரையொன்று எதிர்வரும் 18ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முத்திரையொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் வெளியிடப்படவிருக்கின்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் சகல ஏற்பாடுகளையும் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்வுகளையும் நடாத்தவிருக்கின்றது. இதன்போது தமிழ் பேராசிரியர்கள் குறிப்பாக அவருடைய ஆளுமை குறித்து பேசவுள்ளனர்.

அன்றைய தினம் (18) காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலே அவருடைய முத்திரைக்காக வடிவமைக்கப்பட்டு பெரிதாக்கப்பட்ட நிழல் படம் (போட்டோ) ஒன்றும் திறந்து வைக்கப்படவிருக்கின்றது.

குறித்த நிகழ்வை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்வை மர்ஹூம் பேராசிரியர் அல்லாமா உவைஸின் குடும்பத்தினர்களும் முஸ்லிம் சேவை ஆலோசனை சபை உறுப்பினர்களான அல்ஹாஜ் முஸ்லிம் ஸலாஹுதீன், அப்சல் மரிக்கார், எம்.இஸட்.அஹ்மத் முனவ்வர் மற்றும் மௌலவி பஸ்லுர் ரஹ்மான் ஆகியோருடன் முஸ்லிம் சேவை பிரிவினர், அதிகாரிகள் மற்றும் அங்கத்தவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.


தகவல் : 

அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் 

SLBC - முஸ்லிம் சேவை ஆலோசனை சபை உறுப்பினர் மற்றும் முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.