YMMA கஹட்டோவிட்ட கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும் சிரமதானம் மற்றும் மரம் நடும் நிகழ்வும்

Rihmy Hakeem
By -
0

 

YMMA கஹட்டோவிட்ட கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் (AGM), மரம் நடுதல், சிரமதானம் மற்றும் தெரு விளக்குகள் நன்கொடை வழங்கும் நிகழ்வுகள் நேற்றைய தினம் (17) கஹட்டோவிட்ட முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வளாகத்தில் இடம்பெற்றது. 

நிகழ்வில் அதிதிகளாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிரதம கதீபும், பாதிபிய்யா தக்கிய்யாவின் கலீபாவும், பாதிபிய்யதுல் காதிரிய்யா அரபுக்கல்லூரியின் பணிப்பாளருமான மௌலவி எம்.என்.எம்.இஜ்லான், அகில இலங்கை YMMA இன் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான பணிப்பாளர் நஸாரி காமில், YMMA இன் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தலைவர் அன்வர் சாதாத், கொழும்பு மத்திய YMMA இன் உப தலைவர் அஹ்மத் ஸலாஹுதீன், YMMA மத்திய கொழும்பு உதவி செயலாளர் அலீம், கஹட்டோவிட்ட முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் நஜீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது YMMA கஹட்டோவிட்ட கிளையின் தலைவராக அல்ஹாஜ் பிர்தவ்ஸ் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 








கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)