பதினோராவது KPL போட்டிகள் நேற்று மாலை Kahatowita பொது மைதானத்தில் இனிதே நிறைவுற்றது. ஜனவரி 31 ஆம் திகதி ஆரம்பமான போட்டிகள் 4 நாட்களாக நடைபெற்று நேற்றைய தினம் மாலை நிறைவுற்றது.

 பிரதான போட்டிகளில் 12 அணிகளும் 40 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கான போட்டியில் மூன்று அணிகளுமாக  15 அணிகள் பங்குபற்றிய தொடரில் மொத்தம் இருபத்தி ஏழு போட்டிகள் நடைபெற்றன.

 தொடரின் நேற்றைய போட்டிகள் இலங்கையின் பிரபல மென்பந்து போட்டி ஒலிபரப்பாளர்களான Lanka softball live வலையமைப்பின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 போட்டியை நேரடியாக கண்டுகளிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்த நிலையில்  நேரடி ஒளிபரப்பின் ஊடாக பல்லாயிரக்கணக்கானவர்கள் கண்டுகளித்தனர்.

நேற்றைய 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான இறுதிப்போட்டியில் Seniors அணியை வீழ்த்தி masters அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடரின் சிறப்பு ஆட்டக்காரராக சீனியர் அணியின் வீரர் சகலதுறை ஆட்டக்காரர் Riviyas தெரிவுசெய்யப்பட்டார்.

 தொடர்ந்து  தொடரின் பிரதான இறுதி போட்டி மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடரின் ஆரம்பம் முதலே தமது திறமைகளை நிரூபித்து வந்த அணிகளான  Main street united மற்றும் Saralanka sharks அணிகள் வெற்றி கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.  இறுதி ஓவர் வரை விறுவிறுப்பாக நடந்த போட்டியின் வெற்றி ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையில் Saralanka sharks வசமானது. போட்டியின் சிறப்பு ஆட்டக்காரராக sharks அணி வீரர் அப்துர் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடரின் நாயகனாக ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவரான Royals அணியின் Zimam தெரிவு செய்யப்பட்டார்.

 நேற்றைய நிகழ்வில் தொழிலதிபரும் இலங்கையின் வளர்ந்து வரும் ஆங்கில வர்ணனையாளருமான Sameer Yunus சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

 நேற்றைய போட்டியின் நடுவராக Ajmeer செயல்பட்டதுடன் புள்ளிப்ப்பதிவில் சகோதரர் Riyas ஒரு சிறந்த பங்களிப்பை வழங்கினார்.

 மேலும் Naveed உத்தியோகபூர்வ படப்பிடிப்பாளராக செயல்பட்டார் 

 இது தவிர தமிழ் வர்ணனையாளராக சகோதரர் Iqbal Nasar செயல்பட சிங்கள மொழி வர்ணனையில் Ameen பங்களிப்பு செய்தார் .இங்கு இருவருக்கும்  உறுதுணையாக பகுதிநேர வர்ணனையாளராக KPL foundation தலைவர் Mubeen செயல்பட்டார் என்பதும்  நினைவு கூறத்தக்கது.

Afham Nizam.

``` *MSU அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற Saralanka sharks* .``` பதினோராவது KPL போட்டிகள் நேற்று மாலை Kahatowita...

Posted by Sports information kahatowita on Sunday, February 6, 2022

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.