ஐ.நா. மனித உரிமை பேரவையின் 49வது கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம்

(ஹைதர் அலி)

ஐ.நா மனித உரிமை பேரவையின் 49வது கூட்டத் தொடர் நாளை 28ம் திகதி பெப்ரவரி 2022 சுவிடசர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற உள்ளது. இந்த அமர்வில் உக்ரேய்ன் ரஷ்ய போர், மற்றும்  ஆப்கானிஸ்தான் விடயங்கள் முதன்மை பெற்றாலும் உலகின் ஏனைய நாடுகளின் மனித உரிமை நிலபரங்கள் ஆராயப்படவிருக்கிறது. 

கடந்த வருடம் 2021  மாரச் மாதம் ஐ. நா மனித உரிமை பேரவையின் 46வது கூட்டத் தொடரில் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் இன்றைய நிலவரம் மற்றும் தற்போதைய மனித உரிமை நிலவரம் போன்ற விடயங்கள்  இக்கூட்டத் தொடரில் மார்ச் 3ம் திகதி ஆராயப்படவிருக்கிறது. 

ஜெனீவாவை தளமாகக்கொண்டு இயங்கும்  Universal Human Rights Council (www.uhrcgeneva.org) என்கின்ற மனித உரிமை அமைப்பு ஐ.நா. மனித உரிமை அமைப்பின் 49 வது அமர்வுக்கு இணையான நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருக்கின்றது. Undermining democracy in the name of Prevention of Terrorism in Sri Lanka. 

இலங்கையில் பயங்கரவாதத் தடுப்பு என்ற பெயரில் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்தல் எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இன் நிகழ்வி்ல் இலங்கையின் முக்கிய அரசியல் பிரதிநிதிகள் மற்றும வெளி நாட்டு ராஜதந்திரிகள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

இந்த நிகழ்வு Hybrid முறையில் இடம் பெறவுள்ளது அதாவது வளவாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் நேரடியாகவும் இணையத்தின் ஊடாகவும் பங்கேற்பார்கள். 

இந்த நிகழ்வில் பங்கேற்க ஆர்வம் உடையவர்கள் உங்களது பெயரை info@uhrcgeneva.org என்கின்ற Email ஊடாக பதிவு செய்து, இனைய பங்கேற்பு virtual Link ஐ  பெற்றுக் கொள்ள முடியும் என்று Universal Human Rights Council ன் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார். 

இலங்கையின் சட்ட ஒழுங்கு மற்றும் நீதித்துறையின் சுயாதீனம், பயங்கரவாத தடைச்சட்டம் PTA, மற்றும் ICCPR போன்ற சட்டங்களை ஸ்ரீலங்கா அரசு எவ்வாறு பயன்படுத்துகிறது, ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் மூலம் குற்றவாளிகளை விடுவிப்பது, மாற்று அரசில் கருத்துடையவர்கள் பழிவாங்கல்களும் , மற்றும் ஜனாதிபதி பொது மன்னிப்பு எனும் பெயரில் உண்மையான குற்றவாளிகள் விடுவிப்பு. போன்ற பல விடயங்கள் உள்ளடங்கிய விரிவான அறிக்கை ஒன்றினை ஐ.  நா.  மனித உரிமை செயலாளர் நாயகம் உற்பட பல சர்வதேச ராஜதந்திகளுக்கு சமர்பிப்பதற்கான  ஒழுங்குகளை யுனிவர்ஷல் மனித உரிமை அமைப்பு (UHRC) செய்து வருவகிறது என்பது குறிப்பிடத்தத்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.