Update 01:24 PM

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குறித்து உளவுத் துறைத் தகவல்கள் கிடைக்கப்பெற்றும் தாக்குதலை தவிர்க்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னைய செய்தி:

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குறித்து உளவுத் துறைத் தகவல்கள் கிடைக்கப்பெற்றும் தாக்குதலை தவிர்க்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்றத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. நீதிபதி நாமல் பலல்லே தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் கடந்த 3 மாதங்களாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 1215 சாட்சியாளர்கள் பெயரிடப்பட்டிருந்தனர்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சிறுவர்கள் உட்பட 275 பேர் உயிரிழந்தனர். 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.