ராகமையில் மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல்

Rihmy Hakeem
By -
0

 ராகம மருத்துவ பீடத்தின் விடுதி மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வௌியில் இருந்து வந்த குழுவினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் தாக்குதல் நடத்தியவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அததெரண

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)