மக்கள் எதிர்நோக்கும் அவல நிலையை கருத்திற் கொண்டு தற்போதைக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை அடுத்த ஒரு வாரத்திற்கு போதுமானதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 35,300 மெட்ரிக் டொன் பெட்ரோல் துறைமுகத்திற்கு வர உள்ளதாகவும் மற்றும் டீசல் கப்பல் ஒன்று நாளை வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அததெரண

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.