பா.நிரோஸ்

நாட்டில் டீசல் தட்டுப்பாடு காணப்படுவதாக தெரிவித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளபோதிலும், எரிபொருளின் விலையை அதிகரிக்காதிருக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை எரிபொருள்களை ஏற்றிகொண்டு நாட்டை வந்தடைந்துள்ள 3 எரிபொருள் கப்பல்களில் உள்ள டீசல், பெற்றோலைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் டீசல் தட்டுப்பாடு உள்ளது. டீசலை ஏற்றிவந்த கப்பலில் உள்ள டீசலைப் பெற்றுக்கொள்வதில் கடந்த நான்கு ஐந்து நாட்களாக தாமதங்கள் ஏற்பட்டன. இதனால் குறிப்பிட்ட அளவான டீசலையே நாம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கியிருந்தோம். இதுவே டீசல் தட்டுப்பாட்டுக்குக் காரணம் எனவும் அவர் கூறினார்.

தென்னாசியாவிலேயே இலங்கையில் மாத்திரமே எரிபொருள் விலை குறைவாகவே காணப்படுகிறது. எரிபொருளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் நாடுகளில் இலங்கை 22ஆவது இடத்தில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.