எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா.


மிக முக்கியமான வழக்கு ஒன்று குறித்த அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.  ஈஸ்டர் குண்டுவெடிப்பு இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளில் ஒன்றாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  அதே நேரத்தில், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி வேண்டும்.இந்த ஈஸ்டர் தாக்குதலுக்குப் பொறுப்பான பிரதான சூத்திரதாரியாக செயல்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி குற்றச்சாட்டுகளை நிரூபித்து தண்டிக்க வேண்டிய கடமை அரசாங்கம், அரசாங்கத்தின் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு உண்டு.முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதியரசரின் தீர்ப்பை அலசினால் பல முக்கிய உண்மைகள் வெளிவருகின்றன.வரவிருக்கும் தீர்ப்பை சிந்திக்கும் போது சட்டமா அதிபர் திணைக்களம், அவர்களின் செயற்பாட்டின் தரம் மற்றும் அவர்களின் செயற்திறனின் வினைத்திறன் ஆகியவற்றின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து கடுமையான கேள்வி எழுகிறது.

ஒரு குற்றச்சாட்டையும் நிரூபிக்காவிட்டால், சமுதாயத்திற்கோ, பாதிக்கப்பட்டவர்களுக்கோ நீதி கிடைக்காது, பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டிக்க முடியாவிட்டால், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாவிட்டால், நீதி கிடைக்காது.  எனவே 800/900/1000 என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் நீதி கிடைக்காது. இன்று இந்த நாட்டில் உள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தின் தன்மையைப் பார்க்கும்போது, ​​அரசியலில் ஈடுபட்டவர்கள் ஊழல் வழக்குகளை வாபஸ் பெறுவது ஒருபுறம், மறுபுறம் நிரபராதிகளாக விடுவிக்கப்படுவது, மறுபுறம் ஆதாரமற்றவை என நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகளை விடுவிப்பது என்றவாறான செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

எனவே நீதி நிர்வாகம் தொடர்பில் முழு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அணுகுமுறையும் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.சட்டமா அதிபர் திணைக்களத்தின் பலத்தை அதிகரிக்கவும், அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி, அவர்களின் தொழில்சார் கொடுப்பனவுகளை அதிகரிக்கவும், அரச சட்டத்தரணிகளின் எண்ணிக்கையை 118ல் இருந்து 218 ஆக அதிகரிக்கவும் நல்லாட்சி அரசாங்கம் பெரும் பணியை செய்தது.மிகவும் திறமையான, அதிக சுதந்திரமான, சிறந்த சட்டமா அதிபர் திணைக்களத்தை நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் அந்த நோக்கம் இப்போது அடையப்படுவதாகத் தெரியவில்லை.

சட்டமா அதிபர் திணைக்களம் இந்நாட்டு பிரஜைகளை பாதுகாக்கவே உள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் தனது நோக்கத்தை அடையவில்லை என்றால், அந்த நம்பிக்கையை இழந்தால், குடிமகன் நிர்க்கதியான நிலைக்கு ஆளாகலாம்.அந்த உதவியற்ற நிலையே இந்த சமூகத்தில் ஸ்திரமற்ற நிலைக்கு வழிவகுக்கும்.எனவே, இந்நிலைமையைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களையும் உத்திகளையும் சட்டமா அதிபர் திணைக்களம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

நேற்றைய தினம் எமது நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வழங்குவதற்கான ‘தித்த’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட காதினல் மற்றும் பேச்சாளர்கள் உண்மையை அறியும் குடிமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைத்தனர். ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன ஆனால் அவற்றின் உள்ளடக்கம் இன்று மக்களுக்கு வெளிப்படுத்தப்படாதுள்ளது.22 தொகுதிகளில் ஒன்றையே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.அவற்றையெல்லாம் ஆய்வு செய்த முன்னாள் சட்டமா அதிபர் இங்கு அரசியல் சதி நடப்பதாகவும், சாராவை விட சாராவை பயன்படுத்தி அரசியல் நோக்கத்திற்காக செயற்ப்படவர்கள் சிலர் இருப்பதாகவும் கூறினார்.அவ்வாறாயின், இந்த 22 தொகுதிகளையும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் வெளிப்படுத்த வேண்டிய கடமை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உள்ளது.இந்த இருபத்தி இரண்டு தொகுதிகளை ஏன் மறைக்க வேண்டும்? 

குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஷானி அபேசேகரவை மீண்டும் கைது செய்வதற்கான சதித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஈஸ்டர் தாக்குதல் குறித்த வெளிவராத உண்மைகள் அந்த மனுவில் தெரியவந்துள்ளது.  எனவே இந்த உண்மையான குடிமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.குடிமக்களுக்கு இன்னும் தெரியாத ஒரு பிரிவினர் உள்ளனர்.அதிகாரிகள் அதை தங்கள் கடமைகளுக்குள் பாதுகாக்கிறார்கள்.சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ளவர்கள் அதை பாதுகாக்கிறார்.ஜனாதிபதி ஆணைக்கு அறிக்கைகளின் சகல தொகுதிகளையும் வெளியிடவில்லை, ஆனால் உண்மையை அறிய குடிமக்களுக்கு உரிமை உள்ளது.  எனவே, இந்த ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக குடிமக்களுக்கு நீதி வழங்குவதற்கு, உண்மையை உள்ளடக்கிய அனைத்து ஆவணங்களும் மறைக்கப்படாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.ஷானி அபேசேகரவின் குற்றச்சாட்டின் பின்னணியில் பாரிய சதி இருப்பதாக நாம் பார்க்கின்ற வகையில்பட வேண்டும்.  முன்னாள் சட்டமா அதிபர் கூறியது போன்று சதியை மறைக்க பலர் முயற்சிக்கின்றனர்.ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை பாராளுமன்றத்திற்கு வழங்க வேண்டும். காதினலுக்கு கொடுக்கப்

இன்று இந்த நாட்டில் உள்ள எமது மக்களும் ஒரு தேசம் என்ற ரீதியில் அரசாங்கம் உருவாக்கிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.அதுதான் மின்சார நெருக்கடி.நான் ஐந்து வருடங்கள் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்து இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டேன்.அரச நிறுவனங்கள் உரிய நேரத்தில் டீசல் விநியோகம் செய்ய முடியாமையினால் கடந்த வார இறுதியில் தேசிய மின்விநியோகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.டீசல் சரியான நேரத்தில் ஆர்டர் செய்யப்படவில்லை.அவர்களுக்கு கொள்வனவு கோரிக்கைகளை மேற்கொள்ள முறையான திட்டம் இல்லாது போனது ஏன்?  நாட்டின் தற்போதைய நிலை ஆண்டுதோறும் வறட்சி போல் உள்ளது.இந்த மின்சார நெருக்கடிக்கு அமைச்சர் கம்மன்பில, அமைச்சர் லொக்குகே மற்றும் முழு அரசாங்கமுமே பொறுப்பு என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.