முடியுமென்றால் தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் - மிலான்

Rihmy Hakeem
By -
0

 


(ரிஹ்மி ஹக்கீம்)

செல்வந்தர்களின் கட்சியானது அப்பாவி மக்களின் வைத்தியசாலைகளில் மாத்திரமே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறது என்று கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக தெரிவித்தார். 

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

முடியுமென்றால் தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அங்குள்ளவர்களின் சம்பளத்தையும் வழங்குமாறு கூறுங்கள்.  ஆனால் அவ்வாறு செய்வதில்லை. இவர்கள் கஷ்டப்படுபவர்களையே பழிவாங்குகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)