மூத்த ஊடகவியலாளர் அல்ஹாஜ் எம்.வை.எம்.நஸீர் எழுதிய "கள் - எலிய முஸ்லிம் கிராம வரலாறும் பரம்பரையும்" நூல் வெளியீட்டு விழா நேற்றைய தினம் (20) கள் - எலிய தௌபீக் சன்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. 

நிகழ்வை அல் மஸ்ஜித் ஸுப்ஹானி ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்திருந்தது. நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக்கொண்டார். 

நிகழ்வில் பிரதம அதிதியாக புரவலர் ஹாஷிம் உமர் கலந்து கொண்டார். விஷேட அதிதியாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகமுமான எம்.எம்.மொஹமட் கலந்து கொண்டார். கெளரவ அதிதிகளாக அல்ஹாஜ் ஏ.எச்.எம்.கலீல் (JP), அல் ஹிமா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நூருல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் கள் - எலிய பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள், ஆலிம்கள், அரச உத்தியோகத்தர்கள், ஊரிலுள்ள பல்வேறு நலன்புரி அமைப்புக்களின் உறுப்பினர்கள், கல்விமான்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.