கஹட்டோவிட்டவை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கொழும்பு இஹ்ஸானியா அரபுக்கல்லூரியின் அதிபர் மெளலவி M.Z.M. ஹூஸைன் ஹஸரத் காலமானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் காலம் சென்ற ஜனாப் மொஹம்மத் ஸகரிய்யா - உம்மு குல்ஸும் ஆகியோரின் அன்புப் புதல்வரும், ஹாஜியானி ஜனீஹாவின் அன்புக்கணவரும், ஜவ்பர் முஅல்லிம், ஜிப்ரி மௌலவி, சியன ஊடக வட்டத்தின் தலைவர் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் மற்றும் மர்ஹூம் ஜனாப் ஜாபிர் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,ஜமீல், ஹமீதா, மொஹமட் ஹாபிஸ், அஹ்மத் ஹுமைதா, ஹுஸ்னா (ஊடகவியலாளர்) ஆகியோரின் அன்புத்தந்தையும், ஸரூக் மௌலவி, பைசால் ஹாபிஸ், டாக்டர் சுஹைப், முஸ்லிம் மீடியா போரத்தின் பொருளாளர் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோரின் மாமானாரும் ஆவார். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 4.30 மணியளவில் திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்ஆ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம். சியன ஊடக வட்டம் சார்பில் அன்னாரது குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.