YMMA கஹட்டோவிட்ட கிளை மற்றும் கஹட்டோவிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில், இரத்ததான முகாம் ஒன்று நேற்றைய தினம் 16 ஆம் திகதி கஹட்டோவிட்ட பாதிபிய்யா அரபுக்கல்லூரி கட்டிடத்தில் நடைபெற்றது.

காலை 08.30 முதல் பகல் 01.30 மணி வரை நடைபெற்ற குறித்த இரத்ததான முகாமில், பலரும் முன்வந்து இரத்தங்களை தானமாக வழங்கியமை விஷேட அம்சமாகும்.

நிகழ்வில் தேர்தல்கள்  ஆணைக்குழு உறுப்பினரும் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளருமான எம்.எம்.மொஹமட், பாதிபிய்யதுல் காதிரிய்யா அரபுக்கல்லூரியின் பணிப்பாளரும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிரதம கதீபுமான மௌலவி எம்.என்.எம்.இஜ்லான், நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர், வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவை சேர்ந்த அதிகாரிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட (KOU) கிளை தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம், கஹட்டோவிட்ட YMMA கிளை மற்றும் கஹட்டோவிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தேசிய இரத்த மாற்று சேவை - வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவால் கஹட்டோவிட்ட YMMA கிளை தலைவர் அல்ஹாஜ் பிர்தவ்ஸிற்கு சான்றிதழ் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் அகிலஇலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் KOU கிளை சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம், நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு புனித அல் குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதி ஒன்றை வழங்கி வைத்தார். (Siyane News)









கருத்துரையிடுக

Blogger இயக்குவது.