பால்மா விலையில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பு காரணமாக ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை இன்று (20) நள்ளிரவு முதல் ரூ.100 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.