இன்றைய(04) ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்த கருத்துக்கள்நாட்டின் தற்போதைய நிலைமைக்கு கோட்டபாய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச ஆட்சியே பொறுப்பேற்க வேண்டும்.  எதிர்கட்சியில் இருக்கும் நாங்கள் இதை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தோம்.நாங்கள் கூறியதை பொறுப்படுத்தவே இல்லை.பல்வேறு விதமாக சுட்டிக் காட்டினோம்.இறுதியில் மக்களுடன் இனைந்து வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினாலும் அது செவிடன் காதில் வீணை வாசிப்பது போல் இருந்தது.இன்று அவற்றையும் தான்டி ஒழுங்குபடுத்தப்படாத விதமாக மக்கள் இன்று வீதிக்கு இறங்கி அரசாங்கத்தை குறைகூறும் நிலை உருவாகியுள்ளது. நாட்டில் எரிசக்தி நெருக்கடியை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். மறுபுறம், விவசாயிகளுக்கு எண்ணெய் இல்லை. அறுவடை செய்ய வழியில்லை. நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்க முடியாத அரசாக மாறியுள்ளது.

எனக்கு தெரிந்த வரையில் 2001 ஆம் ஆண்டு வரை 12 மணித்தியாலங்கள் நாட்டில் மின்சாரம் இல்லாமல் இருந்தது,ஐ.தே.க அரசாங்கம் வந்து கரு ஜயசூரிய மின்சக்தி அமைச்சராக பதவியேற்று 159 நாட்களில் இந்த மின்சார நெருக்கடியைத் தீர்த்து வைத்தார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களில் ஏழரை மணி நேரம் மின்சாரம் இல்லாமல் போகிறது. இதற்கு அரசிடம் பதில் இல்லை.எண்ணெய் கொள்வனவு செய்ய டொலர் இல்லை.

சர்வதேச சமூகமும் பிற நிறுவனங்களும் நெருக்கடி மோசமடைந்து வருவதாகக் கூறுகின்றன.அரசாங்கமும் அதிர்ந்து போய், ஒரு பக்கம் ஒரு குழு வெளிவர முயற்சி செய்து பல அமைச்சர்களை நீக்கியது.அடுத்த மாதம், மற்றொரு குழு வெளியேறும் என கேள்வி படுகிறோம். எனவே, இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்கான ஒரே தொலைநோக்குப் பார்வை கொண்ட கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே. இந்தப் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஒன்றிணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதன் தொடர்ச்சியான போராடத்தின் ஆரம்பத்தை மார்ச் 15 பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் தொடங்குவோம். இந்நாட்டை காப்பாற்றும் பயணத்தில் இறங்க இந்த நாட்டில் உள்ள அனைவரையும் அணி திரளுமாறு அழைக்கிறோம். திருடர்கள் அலையை வீட்டுக்கு அனுப்ப தேவையான நடைபயணத்தை மார்ச் மாதத்தில் நாங்கள் தொடங்குகிறோம். நாட்டை நேசிக்கும், நாட்டைக் காப்பாற்றும் அணியில் இனைந்து கொள்ளுமாறு சகலருக்கும் அழைப்பு விடுக்கிறோம் என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.