கீவ் நகரில் ரஷிய படைகள் முன்னேறாமல் தடுக்க ரஷ்ய ராணுவ வாகனங்களை கொண்டு, உக்ரைன் பொதுமக்கள் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். 

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இரு தரப்பிலும் போர் நீடித்து வருகிறது.

இதற்கிடையில் தற்போது ரஷியாவின் வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்  பகுதிக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில், கீவ் நகரில் ரஷிய படைகள் முன்னேறாமல் தடுக்க உக்ரைன் மக்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். கீவ் நகரில் பல்வேறு இடங்களில் சேதத்திற்கு உள்ளான ரஷிய ராணுவ வாகனங்களை கொண்டு தடைகளை பொதுமக்கள் ஏற்படுத்தியுள்ளனர். ரஷிய படைகள் முன்னேறாமல் இருக்க சாலைகளில் மனித கேடயமாக மக்கள் திரண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஸ்ப்போரிஷ்யா அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் கைப்பற்ற போவதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து தகவலறிந்த அணுமின் நிலைய ஊழியர்கள், ரஷிய படைகள் முன்னேறாமல் இருக்க சாலைகளில் திரண்டுள்ளனர்.

தினந்தந்தி

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.