ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி முலம் 182 மதிப்பெண்களைப் பெற்று களுத்துறை மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ள களுத்துறை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய மாணவி ஆய்ஷத் ருகையா அர்ஷாத் தனது கல்லூரிக்கும் களுத்துறை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

இவர் அர்ஷத் ஜமால் ஆசிரியை நஸுஹா ரியால் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியாவார். மேலும் இவரது இச்சாதனைக்கு அவரது வகுப்பாசிரியை திருமதி சிஹாரா ஹாரூன் அவர்கள் பக்கபலமாகத் திகழ்ந்துள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது. 

இவரை களுத்துறை நகர சபை உருப்பினர் ஹிஷாம் ஸுஹைல் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார். மேலும் இதே பாடசாலை கடந்த ஆண்டுகளிலும் மாவட்டத்தில் முதலிடங்களைப் பெற்றுள்ளது என பாடசாலை அதிபர் திருமதி ஆய்ஷா ஷாபி அலவி குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.