இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47 (II) (ஆ) பிரிவின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் இன்று (03) பிற்பகல் தமது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

அமைச்சர் பதவிகளில் திருத்தம்...

விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, பல அமைச்சுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

எரிசக்தி அமைச்சராக காமினி லொகுகே அவர்களும், மின்சக்தி அமைச்சராகப் பவித்ராதேவி வன்னியாரச்சி அவர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

03.03.2022
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.