பொய்கள் கோலோச்சும் யுகத்தை உண்மையின் பெயரால் தோற்கடிப்போம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு

இன்று பொய்கள் மேலோங்கி வருவதாகவும், அதன் விளைவாக நாடு தீவிர ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட வன்னமுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொய்கள்,கட்டுக்கதைகள் மூலம் நாட்டை நடத்தும் அரசாங்கம் நாட்டை பொய்யாக்கி மக்களை வீதியில் தள்ளியுள்ளதாகவும், வரிசைகள் யுகத்தில் நிற்கும் மக்கள் மிகவும் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தொலைநோக்கு உறுதிப்பாடுகள் காரணமாக இன்று தரிசு நாடுகள் ஆப்பிரிக்காவின் சிங்கப்பூர் ஆகிவிட்டதாகவும், நச்சு இரசாயன குண்டுகளால் அழிந்த வியட்நாம் விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இத்தனைக்கும் மத்தியில் இலங்கை நாளுக்கு நாள் சீரழிந்து வருவதாகவும் என தெரிவித்தார்.

ஶ்ரீ சம்புத்த சாசனத்தின் நிலைத்தன்மையும் ஆயிரக்கணக்கான பௌத்தர்களால் போற்றப்படுவதுமான புனித வழிபாட்டை கருத்திற் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முன்னணிப் பங்களிப்போடு பத்தாவது கட்டமாக கட்டுகம்பொல,பன்னல,நாலவலான பல்வலகும்புர ஸ்ரீ விஜயராம விகாரையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சைத்திய கோபுர திறப்பு விழா கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் இன்று (20) இடம் பெற்றது.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.