கொரோனா வைரஸால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கதரக்கதர எரித்த சாபத்தையே இந்த ஆட்சியாளர்கள் அனுபவித்து வருகிறார்கள்.

நாட்டினுடைய பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்களை படுபாதாளத்துக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளதாக தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், நாட்டு மக்களின் சாபத்தைப் பெற்ற அரசாங்கமாக இது இருக்கிறது. வீட்டுக்குப் போங்கள் என்று சொல்லுமளவுக்கு இன்றைய ஆட்சியாளர்கள் மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

(SLMC STR) சம்மாந்துறை முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸின் 5ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இளைஞர் ஒன்று கூடல் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  இன்றைய ஆட்சியாளர்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று பிச்சை வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் இந்தியா ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இது இன்னும் இரண்டு மாதத்திற்குள் முடிந்து விடும். அதற்கு பிறகு எந்த நாட்டில் போய் வாங்குவது. மீண்டும் இவ்வாறான நெருக்கடி ஏற்படும். இவ்வாறான நிலைமை கடந்த காலங்களில் கிரேக்கத்திலும், லெபனான் போன்ற நாடுகளில் ஏற்பட்டிருந்தன எனவும் தெரிவித்தார்.

அந்த நாடுகளில் அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சியை அமைத்தாலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தன. அவ்வாறான நிலைமைதான் எமது நாட்டுக்கும் ஏற்படப்போகின்றது. கொரோனா வைரஸால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கதரக்கதர எரித்த சாபத்தையே இந்த ஆட்சியாளர்கள் அனுபவித்து வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.



Live Streaming from Sammanthurai

SLMC STR

Posted by Rauff Hakeem on Saturday, March 19, 2022

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.