(எம்.என்.எம்.அப்ராஸ்)

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியரும், விடி­வெள்ளி பத்­தி­ரி­கையின் சுயா­தீன ஊட­க­வி­ய­லாளருமான றிப்தி அலிக்கு 2020ஆம் ஆண்­டுக்­கான விசேட நிலை­மை­களில் செய்தித் தேட­லுக்­கான பேரா­சி­ரியர் கைலா­ச­பதி நினைவு விரு­து வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னமும் இலங்கை பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் சங்­கமும் இணைந்து இந்த விருதினை வழங்கியுள்ளது. 2019 மற்றும் 2020ஆம் ஆண்­டு­க­ளுக்­கான ஊடக அதி­யுயர் விருது வழங்கும் விழா கொழும்பு, ஹில்டன் ஹோட்­டலில்  கடந்த செவ்வாய்க்கிழமை (22) நடை­பெற்றது.

கல்முனையினை பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஊடகத் துறையில் பல விருதுகளை பெற்றுள்ளார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் செயலாளரான இவர், கல்முனை ஸாஹிரா தேசிய  கல்லூரி, சம்மாந்துறை தொழிநுட்ப கல்லூரி, இலங்கை இதழியல் கல்லூரி மற்றும் அமெரிக்காவின் ஒக்லஹோமா பல்கலைக்கழகத்தின் கேலோர்ட் ஊடக கற்கை நிறுவனம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். 

அமெரிக்கா, ஈரான், இந்தியா, பலஸ்தீன் மற்றும் சவூதி அரேபியா போன்ற பல நாடுகளில் இடம்பெற்ற ஊடக செயலமர்வுகளில் கலந்துகொண்டு பல பயிற்சிகளை பெற்றுள்ளார். 

ஊடக வளவாரான இவர், தகவல் அறியும் உரிமை, போலிச் செய்திகளை இனங்காணல் மற்றும் புலனாய்வு ஊடகவியல் போன்றவற்றில் சிறப்புத்தேர்ச்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.