எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (24) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதி.

நேற்றைய சர்வக் கட்சி மாநாடு எந்தவித சட்ட அடிப்படையும் இல்லாத வேலைத்திட்டமாகும். சட்டப்பூர்வ அதிகாரம் எதுவும் அதற்கு இல்லை. சட்ட அந்தஸ்து இல்லை. சர்வ கட்சி மாநாடு என்பது நாடாளுமன்றத்தைப் போன்றோ, அமைச்சரவையைப் போன்றோ பொறுப்பு வாய்ந்த கட்டமைப்பு சார் திட்டம் அல்ல.சட்டபூர்வமான ஜனநாயக நிறுவனங்களை பலவீனமடைய செய்து ஒரு மேலாதிக்கத்தை ஈர்ப்பதற்கு மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுடன் கூடிய தந்திரம் என்று இதை விவரிக்கலாம்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பாகவே சர்வக்கட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.நாட்டின் நிதி காட்டுப்பாடுகள், நிதிக் கட்டுப்பாட்டின் முழுமை பாராளுமன்றத்திற்கே பொறுப்பளிக்கப்பட்டமை அனைவருக்கும் தெரியும். ஜனநாயக அமைப்பில் நீதித்துறை ,சட்டமன்றம் , நிறைவேற்று அதிகாரம் போன்ற மூன்று விடயங்கள் உள்ளன. நிதி நிலைமைக்கான முதன்மைப் பொறுப்பு பாராளுமன்றத்திற்கே உள்ள போதிலும், அண்மைக்காலமாக இந்நாட்டின் நிதியமைச்சர் என்ற வகையில், இந்த கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்பில் பாராளுமன்றத்திற்கு வந்து விளக்கமளித்தாரா?

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருக்கும்  பாராளுமன்றத்திற்கான கௌரவத்தை இந்த அரசாங்கம்  வழங்கியதா? நாடுகளுடன் செய்யப்பட்ட விற்பனை ஒப்பந்தங்கள் பற்றி அரசாங்கம் அறிக்கைகளை வெளியிட்டதா? இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பிரேரணைகளை செவிமடுக்க நிதி அமைச்சர் பாராளுமன்றத்தின் நேரத்தை செலவிட்டரா? நமது நாட்டின் பாராளுமன்ற வரலாற்றில் இது போன்றதொரு நிலை ஏற்பட்டதில்லை. பாராளுமன்றம் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.

இந்த பொருளாதார நெருக்கடிகள் குறித்து பாராளுமன்றத்திற்கு வெளியே விவாதிக்க பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏன் அப்படி செய்கிறார்கள்? பாராளுமன்றத்தில் கட்சிகளுடன் பேசுவதற்கு ஜனாதிபதிக்கென்று இருக்கை உள்ளது. நிதி அமைச்சருக்கும் ஆசனம் உள்ளது. ஜனநாயக நிறுவனங்கள்கள் ஏன் பலவீனமடைகின்றன? அந்த நிறுவனங்களை ஏன் கேவலப்படுத்த வேண்டும். அவையில் அமர்ந்து விவாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் அனைத்து விவகாரங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் என்ற ரீதியில் நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றோம். நாட்டுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்றம் விவாதத்திற்கு வர வேண்டும். அதற்கு முழு ஆதரவு அளிப்பேன். ஆனால் அப்படியொன்று ஏற்கப்படவில்லை. மக்கள் மீது வரி விதிக்க எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் வெளியில் எடுக்கப்பட்டவை. பெரும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு வரிச்சலுகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வரிக் கொள்கை மாற்றப்பட்டுள்ளது. நேரடி வரி குறைக்கப்பட்டது. மறைமுக வரி அதிகரிக்கப்பட்டது. அப்போது என்ன நடக்கும்? பொருட்களின் விலை உயரும். இந்த நாட்டில் கஷ்டப்படும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மீது பாரத்தை சுமத்துகிறார்கள் என்றே அர்த்தம். நேரடி வரி குறைப்பால் முதலாளிகள் நிம்மதி அடைந்தனர். இந்த நாட்டில் பெரும் பணக்காரர்களுடன் பொருளாதார நெருக்கடி பற்றி  பேசுகிறோமா?

ரோஜா மலரைக் காண்பிக்கும் எங்கள் வணிகம் நன்றாக இருக்கிறது என்று நாங்கள் நினைகிறோம்.ஹிட்லர் போல ஜனநாயகத்திற்கு எதிரான போக்கு காணப்படுகிறது.

ஜனநாயகம் பற்றி அறிந்தவர் என்று கூறும் எமது முன்னாள் தலைவரும் திரு நிமல் சிறிபாலவின் நட்பின் காரணமாகவே தான் சர்வக்கட்சி மாநாட்டிற்கு வந்ததாக கூறுகிறார். இன்னொரு இடத்தில் திரு.நிமல் சிறிபாலவின் நட்பின் காரணமாக நான் இதற்கு வருகிறேன் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமான கூற்றாகும்.இவர்

கூறும் நட்புறவில் மறைமுக விடயமொன்று உள்ளது.அவருடைய உண்மையான நட்புறவு திரு நிமல் சிறிபால டி சில்வாவுடன் இல்லை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.