டீசல் விலை அதிகரிக்கப்பட்டமை காரணமாக நாளைய தினம் (13) பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் அல்லது டீசலுக்கான மானியத்தை வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் திங்கட்கிழமை முதல் சேவையில் ஈடுபட மாட்டோம் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
ஒரு லீட்டர் டீசலுக்கான விலை ரூபா 55 இனால் அதிகரிக்கப்பட்டமையானது, 45 வீத அதிகரிப்பு எனவும் அதனால் பஸ் கட்டணத்தை 15 வீதத்தினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.