இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதியமைச்சர்  அஹ்மத் சாதிக் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமத் முப்தி ஆகியோர்களின் வேண்டுகோளிற்கிணங்க களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஐந்து பாடசாலைகளுக்கு 24 கிரிக்கட் விளையாட்டு உபகரணங்கள் (Cricket kits) வழங்கப்பட்டது.

இந்நிகழ்வானது பாகிஸ்தான் உயர்ஸ்தானி ஜெனரல் உமர் பாரூக் புர்கி அவர்களின் தலைமையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயலயத்தில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. நாமல் ராஜபக்ஷ அவர்களும் விருந்தினர்களாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இயக்குனர்கள் மற்றும் இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதமர் உட்பட மேலும் பல வெளிவிவகாரம் தொடர்பான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இறுதியாக இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக் அவர்களின் நன்றி உரையில் , எமது வேண்டுகோளினை மதித்து அதற்கேற்ப வாய்ப்பினை எமக்கு வழங்கியமைக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி அவர்களுக்கும் இரண்டாம் செயலாளர் திருமதி ஆயிசா அபூபக்கர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு கௌரவ அமைச்சர் திரு நாமல் 

ராஜபக்ச அவர்களது ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டலுக்கும் நன்றியினை தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வினை ஒரு முன்மாதிராயான நிகழ்வாக நாம் அவதானிக்கின்றோம், ஏனெனில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய,எதிர்கால அனைத்து இளைஞர் தலைவர்களுக்கும் இந்த செயற்பாடு ஒரு சிறந்த ஊக்குவிப்பினை வழங்கும் என்றும் கருதுவதாகவும் மேலும் எதிர்காலத்தில் இலங்கை-பாகிஸ்தான் இருநாடுகளினதும் உறவானது இளைஞர்களின் ஊடாக எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை, ஸாம் ரிபாய் தேசிய பாடசாலை,பேருவளை ஆரியவன்ச பாடசாலை, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி, பேருவளை டி.எஸ் சேனாநாயக்க ஆகிய பாடசாலைகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Ahmath Sadique

Deputy Minister of External Affairs and Diplomatic Relations Sri Lanka Youth Parliament 🇱🇰கருத்துரையிடுக

Blogger இயக்குவது.