வைத்தியர் ஷாபி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலப்பகுதியில் அவருக்கு உரித்தாக வேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தையும் வழங்குவதற்கு பொதுசேவைகள் அமைச்சின் தாபன பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Siyane News)