அத்தனகல்ல பிரதேச செயலகத்தில் பௌத்த விவகார இணைப்பாளராக சேவையாற்றிய ஆரகொட தம்மவில தேரர் இடமாற்றம் பெற்று செல்லவுள்ளார்.

இந்நிலையில், அவர்கள் சர்வ மத சகவாழ்வுக்காக ஆற்றிய பங்களிப்புக்காக கஹட்டோவிட்ட YMMA கிளையின் தலைவர் அல்ஹாஜ் பிர்தவ்ஸினால் தர்மச்சக்கரம் ஒன்று நினைவுப்பரிசாக வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் மொழிபெயர்க்கப்பட்ட புனித அல் குர்ஆனின் சிங்கள மொழி பெயர்ப்பின் பிரதியொன்றும் ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட கிளை (KOU) தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் சமத் மூலம் அல்ஹாஜ் பிர்தவ்ஸினால் ஆரகொட தம்மவில தேரருக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.