எரிவாயு கையிருப்பு இல்லாமை காரணமாக எதிர்வரும் 25ஆம் திகதி வரை சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் ஏப்ரல் 12ஆம் திகதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு  வழங்குவதை நிறுத்தி வைத்தது. இம்மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையும் என்றும் அதன் பின்னர் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் லிட்ரோவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் தகனசாலைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினகரன் 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.