றம்புக்கணையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் தமக்குள்ள அதிகாரத்துக்கும் அப்பால் செயற்பட்டார்களா என்பது குறித்து கண்டறிவதற்கு மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இந்த குழுவில் இராஜாங்க அமைச்சின் செயலாளர், அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து பொது மக்களும் ,அமைதியை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறும் வன்முறையை தவிர்க்குமாறும், தாம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.