பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களிப்பதற்காக அந்நாட்டு நாடாளுமன்றம் கூடியது. இந்நிலையில் வாக்கெடுப்பு தொடங்கும் முன்பே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரிப்பதாக துணை சபாநாயகர் கான் சூரி அறிவித்தார். நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான் கான் பரிந்துரைத்தார்.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 5-க்கு எதிராக இருப்பதாக துணை சபாநாயகர் அறிவித்திருந்தார்.

தேசிய சட்டமன்றம் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வந்துகொண்டிருக்கும் எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், ஆனால் பிரதமர் இம்ரான் இதுவரை வரவில்லை என்றும் பிபிசி செய்தியாளர் ஹுமைரா கன்வால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் ஏராளமான இருக்கைகள் காலியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் இம்ரான்கான், நாடாளுமன்றத்தைக் கலைக்கவும், மீண்டும் தேர்தல் நடத்தவும் ஜனாதிபதிக்கு தாம் பரிந்துரைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

"நாட்டு மக்கள் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும். வெளி ஆள்கள் அல்ல" என்றும் அவர் கூறியுள்ளார்.

பிபிசி

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.