கம்பஹா மாவட்டம், கலகெடிஹேன பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அருகில் இரு நாட்களாக வாகனத்தை நிறுத்தி வரிசையில் இருந்த பெருமளவிலானோர் இன்று (17) இரவு 07.30 மணி முதல் கொழும்பு - கண்டி பிரதான வீதியை வாகனங்களால் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே நிட்டம்புவ, கம்பஹா, வீரங்குல, யக்கல மற்றும் பெம்முல்ல பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் வருகை தந்த போதும் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. (Siyane News)