கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) நிறுவனத்தின் வருடாந்த இப்தார் மற்றும் ஹிஸ்புல் குர்ஆன் தமாம் பரிசளிப்பு நிகழ்வு நேற்றைய தினம் (28) நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் MLSC தலைவரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் ஆலோசனை சபை உறுப்பினருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவிகளுக்கு கொழும்பு S.S.K.Hajiyaar and Company அனுசரணையில் பரிசில்கள் (Clothes Gifts) வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் நிகழ்வுகளுக்கு ஹாஜியானி சிகாமணி ஆமினா முஸ்தபா, திஹாரிய முஆத் ஹாஜியார் மற்றும் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் உள்ளிட்டோரின் அனுசரணையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

MLSC இன் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுகளில் அதன் நிர்வாக அங்கத்தவர்கள், ஆலிமாக்கள், மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.