எம்.எப்.எம்.அலி

அளுத்கம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்யும் ஒருவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பெற்றோல் போத்தல் ஒன்றினை 800 ரூபாவிற்கு விற்பனை செய்யும் போது பெற்றோல் கையிருப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார் என பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, ​​தனது கணவர் கொண்டு வரும் பெற்றோலை தான் விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் பத்ம குமார விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.