கஹட்டோவிட்ட பாதிபிய்யதுல் காதிரிய்யா தக்கியாவில் வருடாந்தம் புனித ரமழான் மாதங்களில் நடைபெற்று வரும் ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸின் இவ்வருடத்திற்கான தமாம் வைபவத்தில் நேற்றைய தினம் (30) தக்கியாவில் நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் நான்கு தடவைகள் புனித அல் குர்ஆன் தமாம் செய்யப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.
தமாம் வைபவத்தில் மௌலவிமார்கள், பாதிபிய்யதுல் காதிரிய்யா தக்கியா நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வானது சுமார் ஒன்றரை நூற்றாண்டை அண்மித்த காலமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)