பாறுக் ஷிஹான்

பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரு சந்தேகநபர்களுக்கும் கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது.

அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் 21 வயது மதிக்கத்தக்க ஒருவர் போலி பரீட்சார்த்தியாக தோற்றியுள்ளார்.

சிங்கள மொழி மூலம்  சமயபாட பரீட்சையை  32 வயதுடைய   தனிப்பட்ட பரீட்சார்த்தியின் அனுமதி அட்டையை பாவித்து, அவருக்கு   பதிலாக ஆள்மாறாட்டம் செய்து 21 வயது நபர்  எழுதி உள்ளதுடன்  தனது அடையாள அட்டையின் புகைப்படத்தை மாற்றியுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்  இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று குறித்த வழக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.